Breaking News
வெற்றிப் பாதைக்கு திரும்புவது யார்?- குஜராத் – பெங்களூரு இன்று மோதல்

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு ராஜ்கோட்டில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

குஜராத் அணி கடந்த சீசனில் அறிமுகமான போதிலும், முதல் தொடரிலேயே 3-வது இடத்தை பிடித்து ஆச்சர்யம் அளித்தது. ஆனால் இந்த சீசனில் கடுமையாக திணறி வருகிறது. அந்த அணி 4 ஆட்டத்தில் 3 தோல்விகளை சந்தித்துள்ளது.

முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த நிலையில் புனே அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் வலுவான மும்பையிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கும் குஜராத் இன்று சொந்த மைதானத்தில்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பெங் களூரு அணியை எதிர்கொள்கிறது. குஜராத் அணி பேட்டிங்கில் வலுவா கவே உள்ளது. பிரண்டன் மெக்கலம், டுவைன் ஸ்மித், ஆரோன் பின்ச், ரெய்னா, தினேஷ் கார்த்திக் ஆகி யோர் அதிரடி வீரர்களாகஉள்ளனர்.

ஆனால் இவர்கள் ஆட்டத்தின் போது ஒட்டுமொத்தமாக திறனை வெளிப்படுத்த தவறுகின்றனர். ஒரு வீரர் சிறப்பாக விளையாடினால் மற்றொருவர் பந்துகளை வீணடிப்பது சற்று பலவீனமாக உள்ளது. கடந்த ஆட்டத்தில் ஸ்மித் சோபிக்க தவறினார்.

ஆனால் அதேவேளையில் மெக்கலம் 64 ரன்கள் விளாசினார். இதேபோல் தினேஷ் கார்த்திக் (26 பந்துகளில் 48 ரன்) அதிரடியாக விளையாடிய நிலையில் ரெய்னா பந்துகளுக்கு நிகராக 28 ரன்கள் சேர்த்தார். பின்ச் தனது கிரிக்கெட் உபகரணங்களை தொலைத்ததால் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்கக்கூடும். பேட்டிங்கில் முன்னணி வீரர்கள் அனைவரும் ஒருசேர சிறப்பாக விளையாடும் பட்சத்தில் பெரிய அளவில் ரன்கள் குவிக்கலாம். பந்து வீச்சில் குஜராத் அணி இன்னும் முன்னேற்றம் காணாமலேயே உள்ளது.

முதல் இரு ஆட்டங்களிலும் ஒரு விக்கெட் மட்டுமே அந்த அணி வீழ்த் திய நிலையில் புனே அணிக்கு எதிராக ஆன்ட்ரூ டை ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்கள் வீழ்த்தி நம்பிக்கை அளித்தார். கடந்த ஆட்டத் தில் மும்பைக்கு எதிராகவும் அவர் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.

ஆனால் மற்ற பந்து வீச்சாளர்கள் அவருக்கு உறுதுணையாக செயல் படாதது பின்னடைவை ஏற்படுத்தி யது. பிரவீண்குமார் ஆரம்ப கட்டத் தில் சிறப்பாக செயல்பட்டாலும் கடைசி கட்டத்தில் ரன்குவிப்பை கட்டுப்படுத்த தவறுகிறார். இன்றைய ஆட்டத்தில் அவர் நீக்கப்படக்கூடும்.

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் முனாப் படேல், பாசில் தம்பி ஆகியோர் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தினர். இதனால் இவர்கள் மேலும் சிறந்த திறனை வெளிப்படுத்தக்கூடும். சுழற்பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜாவை தவிர ஜகதி, கவுசிக் ஆகியோர் அதிக ரன்களை தாரைவார்க்கின்றனர். ஒட்டுமொத்தமாக பந்து வீச்சை சரிசெய்தால் மட்டுமே குஜராத் அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியும்.

5 ஆட்டத்தில் 4 தோல்விகளை சந்தித்துள்ள பெங்களூரு அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத் தில் உள்ளது. கடந்த சீசனில் பெரிய அளவில் ரன்குவித்த பெங்களூரு அணி இம்முறை சொந்த மைதானத்தில் கூட ரன்சேர்க்க திணறி வருகிறது. கெய்ல் பார்மின்றி தவிப்பது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

2 ஆட்டத்தில் நீக்கப்பட்ட அவர் இதுவரை இந்த சீசனில் 60 ரன்களே சேர்த்துள்ளார். காயம் காரணமாக முதல் 3 ஆட்டங்களில் விளையாடாத கோலி, மும்பைக்கு எதிராக தோல்வியடைந்த ஆட்டத்தில் 62 ரன்கள் எடுத்தார். ஆனால் புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 28 ரன்களே சேர்த்தார்.

டி வில்லியர்ஸ், வாட்சன், கேதார் ஜாதவ் போன்ற அதிரடி வீரர்கள் அணியில் இருப்பினும் இவர்கள் தொடர்ச்சியாகவும் அதேவேளையில் ஒட்டுமொத்தமாக சிறந்த திறனை வெளிப்படுத்தாதது பலவீனமாக உள்ளது.

பந்து வீச்சு குஜராத் அணியைவிட சற்று பலமாகவே உள்ளது. டைமல் மில்ஸ், பில்லி ஸ்டேன்லேக், யுவேந்திரா சாஹல், நாத் அர்விந்த், சாமுவேல் பத்ரி ஆகியோர் பந்து வீச்சில் பலம் சேர்ப்பவர்களாக திகழ்கின்றனர்.

அணிகள் விவரம்

குஜராத் லயன்ஸ்:

சுரேஷ் ரெய்னா (கேப்டன்), பிரண்டன் மெக்கலம், டுவைன் ஸ்மித், ஆகாஷ்தீப் நாத், சுபர் அகர்வால், பாசில் தம்பி, டுவைன் பிராவோ, சிராக் சூரி, ஜேம்ஸ் பாக்னர், ஆரோன் பின்ச், மன்பிரித் கோனி, இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷதாப் ஜகதி, தினேஷ் கார்த்திக், ஷிவில் கவுசிக், தவால் குல்கர்னி, பிரவீன் குமார், முனாப் படேல், பிரதாம் சிங், ஜேசன் ராய், பிரதீப் சங்வான், ஜெயதேவ் ஷா, ஷேல்லே சவுர்யா, நது சிங், தேஜாஸ் பரோகா, ஆன்ட்ரூ டை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், ஷான் வாட்சன், கிறிஸ் கெய்ல், நாத் அர்விந்த், அவேஷ் கான், சாமுவேல் பத்ரி, ஸ்டூவர்ட் பின்னி, யுவேந்திரா சாஹல், அனிகெட் சவுத்ரி, பிரவீன் துபே, டிரெவிஸ் ஹெட், இக்பால் அப்துல்லா, கேதார் ஜாதவ், சர்ப்ராஸ் கான், மன்தீப் சிங், டைமல் மில்ஸ், ஆடம் மில்னே, பவன் நெகி, ஹர்ஷால் படேல், சச்சின் பேபி, தப்ராசி ஷம்சி, பில்லி ஸ்டான்லேக்.

இடம்: ராஜ்கோட்

நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.