Breaking News
கட்சியிலிருந்து சசி குடும்பத்தினரை முழுமையாக ஒதுக்கி வைக்க அமைச்சர்கள் முடிவு

தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சசி குடும்பத்தினை கட்சியை விட்டு முழுமையாக நீக்கிவிட்டு ஆட்சியை காப்பாற்ற அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., அணிகளை இணைப்பதற்கான பேச்சு துவங்கி உள்ளது. தினகரனை ஓரங்கட்டி விட்டு, இரு தரப்பும் இணைவதற்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பச்சைக்கொடி காட்டியிருந்தார். அதற்கு, சசிகலா அணியைச் சேர்ந்த, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சசிகலா குடும்பத்திற்கு எதிராக, அமைச்சர்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர். சசிகலா மற்றும் தினகரனை, கட்சியில் இருந்து விலகிக் கொள்ளும்படி கூறி வலியுறுத்தி வந்தனர். அவ்வாறு . விலகாவிட்டால், அவர்களை விலக்கி வைப்பது குறித்து, முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆலோசித்து வந்தனர்.இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று முதல்வர் பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் ஜெயக்குமார் அளித்தபேட்டி.

* கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தினரின் ஆதிக்கம் இருக்க கூடாது.
* தினகரன், சசி ஆகியோரை கட்சியில் இருந்து முழுமையாக நீக்கவிட்டு கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும்.

* ஓ.பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் நாங்கள் தயாராக உள்ளோம்.

* ஒற்றுமையாக செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம்.
* இனி கட்சியிலும், ஆட்சியிலும் தினகரன், சசி ஆகியோரின் தலையீடு எள்ளளவும் இருக்காது, இருக்கவும் கூடாது.

* தினகரன் குடும்பத்திற்கு இனி கட்சியில் இடம் இருக்காது.

* தொண்டர்களின் விருப்படி ஆட்சி அமையும். கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சியை வழி நடத்த குழு அமைக்கப்படும். இவ்வாறு ஜெயக்குமார் பேட்டியளித்தார்.
* எம்.எல்.ஏ.,க்கள் சுப்பிரமணி மற்றும் வெற்றிவேல் தினகரனுக்கு ஆதரவளிப்பதாக அவர்கள் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

* எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் தினகரன் பக்கம் செல்கிறார்கள் என்பது குறித்து நளை(ஏப்-19) முழுமையாக தெரியவரும் எனத்தெரிகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.