தனுஷின் ஹாலிவுட் படம் : மே 14-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடக்கம்
கோலிவுட், பாலிவுட்டில் நடத்த தனுஷ் தற்போது பாலிவுட் படத்திலும் நடிக்க உள்ளதாக செய்திகள் வந்தன. ஆனால் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்ற தகவல்கள் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த படத்திற்கு தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர் என பெயரிடப்பட்டுள்ளது. கனடா நாட்டை சேர்ந்த கென் ஸ்காட் இந்த படத்தை இயக்க உள்ளார். தனுஷ் நடிக்கும் இந்த படம் ரொமன்டிக், மற்றும் காமெடி படமாக உருவாக உள்ளது. டெல்லியிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் ஃபகிர் எனும் கேரக்டரை மையப்படுத்தியே இப்படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட இருக்கிறது.